பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இதே உணர்வோடுதான், காக்கை குருவி எங்கள் ஜாதி-tள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாடலும் அற்புதமாகப் பிறக்கின்றது. இந்த நேரத்திலே பாரதியார் இமய மலையின் உச்சியி லிருந்து நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம் என்று கர்ஜனை புரிகின்ருர். அப்படி அவருடைய உள்ளம் பொங்கி வழிந்து உணர்ச்சிவெள்ளம் கரை புரண்டோட எல்லாவற்றையும் ஒருமை உணர்வோடு நோக்கிக் கவிதை டொழிகின்ருர். ஆனல் பாரதியார் வெறும் கனவு காணும் கவிஞரல்ல; கனவிலேயே உள்ளத்தைப் பறிகொடுத்து அவர் நின்று விடவில்லை. அடுத்த கணத்திலே யதார்த்த நிலையைப் பார்க்கிரு.ர். அவர் உள்ளம் பல முனைகளில், பல கோணங்களில் பொருத்தி வைக்கப் பெற்ற கண்ணுடி போன்றது. இமயமலை உச்சியிலிருந்து அடிவாரத்திற்கு வருகிரு.ர். வந்து மண்ணுலகையும் இங்கு வாழும் மக்களின் பிரத் தியட்ச நிலையையும் காண்கிருர், ஞான ரதத்திலேறிக் கந்தர்வலோகத்திற்கும் ஒரு கணத்திலே பாரதியார் செல்லுவார். மறு கணத்திலே மண் ணுலகத்திற்கு வந்து இங்குள்ள உண்மை நிலையையும் தெளி வாகக் காண்டார். கண்டு 'என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலைச்,