பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஸாரமில்லை. ஸ்த்துக் கிடையாது; உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை' என்று மனங்கசந்து பேசுகின்ருர். இவ்வாறு மனங்கசந்து பேசிய பாரதியார் உலகத் தைத் துறந்து, மக்களினத்தை விட்டு நீங்கிப்போய் விட் டாரா? மக்களை வெறுத்து விட்டாரா? இல்லவே இல்லை. யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டு எங் கெங்கு கொடுமை ஓங்குகிறதோ அங்கெல்லாம் அக் கொடு மையைச் சாடித் தமது வலிமையான கவிதைக் குரலாலும் உரை நடைக் குரலாலும், பேச்சுக் குரலாலும் கண்டனம் தெரிவித்து அக் கொடுமையை ஒழிக்கப் பாடுபடுகின்ருர். இதில் அவர் சோர்வடைந்ததே இல்லை. இந்த உணர்வின் அடிப்படையிலேதான் பாரத தேசத்தை அடிமைப் படுத்தி வறுமைக்கும், பிணிக்கும்: பஞ்சத்திற்கும் உள்ளாக்கிய ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து முழங்கினர்; பெல்ஜிய நாட்டிற்கு வாழ்த்துப் பாடினர்; புதிய ருஷியாவில் கலியுகம் விழுந்து கிருதயுகம் எழுக என்று ஆசி கூறினர். ஐர்லாந்து, கிரீஸ், பாரளபீகம், துருக்கி முதலான நாடு களுக்கு, பிரிட்டனும், நேசக் கட்சியாரும் இழைத்த அநீ தியை வன்மையாகக் கண்டிக்கிருர். இங்ங்னம் கண்டிப்பது மறைமுகமாக பாரத மக்களுக்கு ஆங்கிலேயர் செய்து வந்த அக்கிரமங்களை எடுத்துக்காட்டி அவர்களை எதிர்த்துப் போராடி விடுதலை பெறத்தூண்டுவதற்குப் பயன் பட்டா லும் அது ஒன்றே பாரதியாரின் நோக்கமாக இருக்கவில்லை. பாரதியார் உலக அரசியல் நடைமுறைகளை எவ்வளவு நுட்பமாக அந்தக் காலத்திலே ஆராய்ந்து மக்களுக்குத் தமது இந்தியா வார இதழின் மூலமாக எடுத்து விளக் கினர் என்பதை நாம் காண்கிறுேம். உலகத்து நாடுகளின்