பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I8 நேரு 1921இல் இந்திய அரசியலில் நுழைந்து மக்களெல் லாம் பரவசமடையும்படி தொண்டாற்றிஞர். தீர்மானங் கள் நிறைவேற்றும் நேரம் வரும்போது அயல்நாட்டுக் கொள்கைகளைங்பற்றிய தீர்மானத்தை உருவாக்கும்படி பண்டிதநேருவிற்கேவிட்டு விடுவார்களாம்.ஏனெனில் அவர் ஒருவர்தான் உலகக்கண்ணுேட்டத்தோடு பல நாடுகளின் வர்த்தமானங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவாராம். அவருக்கு நமது நாட்டின் கதிமோட்சம் மற்ற உலக நாடு களின் போக்கோடு பின்னிக்கிடக்கின்றது என்கிற உணர்வு மிகுந்திருந்தது. பாரதியார் நடத்திய இந்தியா வார இதழ் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்றது. அது 1910 மார்ச்சுத் திங்களோடு நின்று விடுகிறது. அந்தக் காலத்திலேயும் சரி, சுதேசமித்திரனில் மீண்டும் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போதும் சரி, பின்னல் அந்த நாளிதழிலேயே உதவி ஆசிரியராக இரண் டாம் முறையாக அமர்ந்த போதும் சரி உலக நடைமுறை களைக் கூர்ந்து கவனித்து அவற்றைப்பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு எளிதில் விளங்குமாறு பாரதியார் எழுதுகின்ருர். பாரசீக தேசத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி இந்தியா வார இதழில் எழுதுவார் (16 மார்ச் 1907); சீனவிலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி எழுது வார் (8 செப்டம்பர் 1906); ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் என்று கட்டுரை தீட்டுவார் (8 டிசம்பர் 1906): ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்று தெளிவு படுத்துவார் (10 நவம்பர் 1906); ஐர்லாந்தைப்பற்றிப் பரிவோடு எழுது வார்; துருக்கியின் நிலையை அதே கட்டுரையில் எடுத்துக் கூறுவார் (15 நவம்பர்1920); கிரேக்க தேசத்தின் ஸ்திதியை விவரிப்பார். (19 நவம்பர் 1920)