பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இவ்வாறு தமிழ் நாட்டின் விழிப்பு என்ற கட்டுரை யிலே 25 ஜனவரி 1918-ல் பாரதியார் எழுதி புள்ளார். இவருடைய மனிதாபிமானத்தைக் காட்ட வேறு எடுத்துக் காட்டு வேண்டுவதே இல்லை. மேலும் உலகத்தின் குருவாக நல்வழிகாட்ட பாரத தேசம் மிகுந்த தகுதியுடையது என்று பாரதியார் திண்ண மாக நம்புகிருர். 'உலகத்துக்கு உபதேசம் செய்ய நாமே தகுதியுடையவர்கள்' என்று அவர் கூறுகின்ருர். 'இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவ தில்லை. திருத்த விரும்புகிறது' என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார் (பார்க்க-யூகோள மஹாயுத்தம்). 'அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங் களே உண்மையான நாகரிகத்தையும் நித்யஜீவனையும் விளக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர, வேறு யாரு மில்லை. கண்ணைத் திறந்து பூ மண்டல முழுவதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.' இவ்வாறு ஹிந்து தர்மம் என்ற கட்டுரையிலே 29 நவம்பர் 1917ல் பாரதியார் எழுதுகின்ருர், மேலும் அக் கட்டுரையிலே போர்க்கருவிகளின் பயனின்மை குறித்து அதிசயிக்கத் தக்கவாறு எழுதுகிருர்; 'நாம் இன்று நூறு ஸப்மரீன் வைத்துக் கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகர்த்தால், நாளை மற்ருெரு ஜாதியார் ஆயிரம் ஸ்ப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்