பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 களை நொறுக்கிப் போடுவார்கள்; பாம்பைக் கொல் ஒரு கீரிப்பிள்ளை யுண்டு. பகை பகையை வளர்க்கும். 'தீராத ஆவலும், அவஸரமும், ஒயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம் யந்திரப் பீரங்கிகளும், ஸ்ப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல...... அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல; அவை மனுஷ்யனுக்குப்பகை. மனுஷ்யனையும் அவன் நாகரிகத்தை யும் அழிக்கும் குணமுடையன.' அணுகுண்டுப் பூதம்தோன்றி மானிடஇனமே அழிந்து போகுமோ என்று அஞ்சுகின்ற இந் நாளில் பாரதி யாருடைய எச்சரிக்கை மிகப் பயனுடையதாகும்; ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். "இப்பொழுது மனிதர் ஒருவருக்கொருவர்பயப்படுவது தான் அதிகம்' என்று பாரதியார் 22 செப்டம்பர் 1916-ல் எழுதினர். இன்று இந்த பயம் பல நூறு மடங்கு அதிகரித் துள்ளது. 'உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா?’ என்று அதே கட்டுரையில் (லோகோபகாரம்) பாரதியார் கேட்கிரு.ர். பாரதியார் விழைகின்ற அந்தக் குடும்பத்திலே சாதி யின் பெயராலும், சமயத்தின் பெயராலும், நிறத்தின் பெய ராலும் எந்த விதமான பிரிவினைகளும் இருக்காது. இந்த ஆசையை முரசு என்ற கவிதையிலே அவர் தெளிவாகக் காட்டுகின்ருர். சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு தன்னில் செழித்திடும் வையம்