பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு தன்னில் செழித்திடும் வையம்; ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம் 9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக் குள்ளே சிலமூடர்-நல்ல மாத ரறிவைக் கெடுத்தார். 10. கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சிக் கெடுத்திட லாமோ? பெண்க ளறிவை வளர்த்தால்-வையம் பேதமை யற்றிடுங் காணிர். 11. தெய்வம் பலபல சொல்லிப்-பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்ருய்-எங்கும் ஒர்பொரு ளானது தெய்வம். 12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம் திக்கை வணங்கும் துருக்கர், கோயிற் சிலுவையின் முன்னே-நின்று கும்பிடும் யேசு மதத்தார்; 13. யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில் பற்பல சண்டைகள் வேண்டாம். 14. வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள் வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை பேருக் கொருநிற மாகும்,