பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 15. சாம்பல் நிறமொரு குட்டி-கருஞ் சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி-வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி. 16. எந்த நிறமிருந்தாலும்-அவை யாவும் ஒரேதர மன்ருே? இந்த நிறம்சிறி தென்றும்-இஃது ஏற்ற மென்றும் சொல்லலாமோ? 17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில் மானுடர் வேற்றுமையில்லை; எண்ணங்கள் செய்கைக ளெல்லாம்-இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர் 18. நிகரென்று கொட்டு முரசே!-இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; தகரென்று கொட்டு முரசே!-பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம் 19. அன்பென்று கொட்டு முரசே!-அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டு: துன்பங்கள் யாவுமே போகும்-வெறுஞ் சூதுப் பிரிவுகள் போனல் 10. அன்பென்று கொட்டு முரசே?-மக்கள் அத்தனை பேரும் நிகராம்; இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால் 21. உடன்பிறந் தார்களைப் போலே-இவ் வுலகில் மனிதரெல் லாரும்; இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?