பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 22. மரத்தினை நட்டவன் தண்ணிர்-நன்கு வார்த்ததை ஓங்கிடச் செய்வான்; சிரத்தை யுடையது தெய்வம்-இங்கு சேர்ந்த உணவெல்லையில்லை 23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! -இங்கு வாழும் மனிதரெல் லோர்க்கும்: பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம் 24. உடன்பிறந் தவர்களைப் போலே-இவ் வுலகினில் மனிதரெல் லோரும்; திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு தின்று பிழைத்திட லாமோ? 25. வலிமை யுடையது தெய்வம் -நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம்: மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை வீழ்த்தி மிதித்திட லாமோ? 26. தம்பி சற்றே மெலிவானல்-அண்ணன் தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள் சிற்றடி மைப்பட லாமோ? 27. அன்பென்று கொட்டு முரசே!-அதில் யார்க்கும் விடுதலை உண்டு; பின்பு மனிதர்க ளெல்லாம்-கல்வி பெற்றுப் பதம்பெற்று வாழ்வார். 28. அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்ருய்; சிறியரை மேம்படச் செய்தால்-பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்