பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பல்வகை மாண்பி னிடையே-கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு; நல்வழி செல்லு பவரை-மனம் நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண் டு 2 நாவு துணிகுவ தில்லை-உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே: யாவருந் தெரிந்திட வே-எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு. மூவகைப் பெயர் புனைந்தே-அவன் முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்: தேவர் குலத்தவன் என்றே-அவன் செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3 பிறந்தது மறக் குலத்தில்:-அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பன ருள்ளே;-சில செட்டிமக்க ளோடு மிகப் பழக்க முண்டு; நிறந்தனிற் கருமை கொண்டான்;-அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்! துறந்த நடைக ளுடையான்-உங்கள் சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான் 4 ஏழைகளைத் தோழமை கொள்வான்;-செல்வம்: ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்: தாழவருந் துன்ப மதிலும்-நெஞ்சத் தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வமளிப்பான்; நாழிகைக்கொர் புத்தி யுடையான்;-ஒரு நாளிருந்த படிமற்ருெர் நாளினி லில்லை, பாழிடத்தை நாடி யிருப்பான்:-பல பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான், 5