பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்துரை நா. மகாலிங்கம் ( தலைவர்-பாரதியார் சங்கம் ) தமிழ் நாட்டுக் கவிஞர் பரம்பரை மிக நீண்ட பரம்பரை, அவர்கள் எல்லோரும் உலகம் ஒன்றே என்று நம்பி வலியுறுத்தி வந்தவர்கள்; வருகிறவர்கள். 'யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்றவர் தமிழ் நாட்டுக் கவிஞர். எல்லா ஊரும் என்னுடைய ஊரே; எல்லா மக்களும் என் உறவினர்களே என்று கணியன் பூங்குன்றனர் பெருமிதத்துடன் பேசுகிருர். 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே; நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான' என்கிறது தொல்காப்பியம். உலகம் என்பது உயர்ந்தவர்களைத்தான் குறிப்பிடும். காரணம் அவர் களால்தான் உலகம் நல்வாழ்வு பெற்று வருகிறது என்கிருர் தொல்காப்பியர். "பண்புடையார்ப் பட்டுண்டு உலகு அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்' பண்புடைய பெருமக்கள் வாழ்வதால் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் இது பூமிக்குள் புகுந்து அழிந்து போய்விடும் என்று அழுத்தமாகச் சொல்கிருர் திருவள்ளுவர். 'உண்டால் அம்ம இவ்வுலகம் பிறர்க்கென வாழுகர் உண்மையானே' என்று புறநானூறு பேசுகிறது. தனக்கென வாழாமல் பிறருக்காகவே-வாழும் சான்ருேர் களால்தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது என்று அந்த புறநானூற்றுப் புலவர் பேசுகிரு.ர்.