பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இன்பத்தை இனிதென வும்-துன்பம் இனிதில்லை யென்றுமவன் எண்ணுவதில்லை; அன்பு மிகவு முடையான்:-தெளிந் தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே. வன்புகள் பல புரிவான்;-ஒரு மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்; முன்பு விதித்த தனையே-பின்பு முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான் 6 வேதங்கள் கோத்து வைத்தான்-அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை: வேதங்க ளென்று புவியோர்-சொல்லும் வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை: வேதங்க ளென்றவற் றுள்ளே-அவன் வேதத்திற் சிலசில கலந்ததுண்டு; வேதங்க ளன்றி யொன்றில்லை-இந்த மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம் 7 நாலு குலங்கள் அமைத்தான்:-அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர், சீலம் அறிவு கருமம்-இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்; மேலவர் கீழவ ரென்றே-வெறும் வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம்-இன்று பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென் பான், 8 வயது முதிர்ந்து விடினும்-எந்தை வாலிபக் களையென்றும் மாறுவதில்லை; துயரில்லை; மூப்பு மில்லை.-என்றும் சோர்வில்லை; நோயொன்று தொடுவதில்லை