பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பயமில்லை, பரிவொன்றில்லை.-எவர் பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை நயமிகத் தெரிந்தவன் காண்;-தனி நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான், 9 துன்பத்தில் நொந்து வருவோர்-தம்மைத் தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்: அன்பினைக் கைக்கொள் என்பான்;-துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்; என்புடை பட்ட பொழுதும்-நெஞ்சில் ஏக்க மறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்: இன்பத்தை எண்ணு பவர்க்கே-என்றும் இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10 9. திருவேட்கை மலரின் மேவு திருவே!-உன்மேல் மையல் பொங்கி நின்றேன், நிலவு செய்யும் முகமும்-காண்பார் நினைவ ழிக்கும் விழியும் கலக லென்ற மொழியும்-தெய்வக் களிது லங்கு நகையும், இலகு செல்வ வடிவம்-கண்டுன் இன்பம் வேண்டு கின்றேன். I கமல மேவும் திருவே!-நின்மேல் காத லாகி நின்றேன் குமரி நின்னை இங்கே-பெற்ருேர் கோடி யின்ப முற்ருர்,