பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அமரர் போல வாழ்வேன்-என்மேல் அன்டி கொள்வை யாயின், இமய வெற்பின் மோத,-நின்மேல் இசைகள் பாடி வாழ்வேன். வாணி தன்னை என்றும்-நினது வரிசை பாட வைப்பேன்! நாணி யேக லாமோ?-என்னை நன்க றிந்தி லாயோ? பேணி வைய மெல்லாம்-நன்மை பெருக வைக்கும் விரதம் பூணு மைந்த ரெல்லாம்-கண்ணன் பொறிக ளாவ ரன்ருே? பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய் பூண்க ளேந்தி வந்தாய்! மின்னு நின்றன் வடிவிற்-பணிகள் மேவி நிற்கும் அழகை என்னு ரைப்ப னேடீ-திருவே! என்னு யிர்க்கோ ரமுதே! நின்னை மார்பு சேரத்-தழுவி நிக ரிலாது வாழ்வேன். செல்வ மெட்டு மெய்தி-நின்ற்ை செம்மை யேறி வாழ்வேன். இல்லை என்ற கொடுமை-உலகில் இலைல் யாக வைப்பேன், முல்லை போன்ற முறுவல்-காட்டி, மோக வாதை நீக்கி, எல்லை யற்ற சுவையே!-எனைநீ என்றும் வாழ வைப்பாய். 2