பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 3. 39 10. வெள்ளைத் தாமரை வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள் வீணை செய்யும் ஒலியி லிருப்பாள் கொள்ளே யின்பங் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே ஒதும் வேதத்தி னுண்ணின் ருெளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள்.(வெள்ளைத்) மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள் மக்கள் பேசும் மழலையி லுள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியினுவை யிருப்பிடங் கொண்டாள் கோதகன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்ருள் இன்பமே வடிவாகிடப் பெற்ருள். (வெள்ளைத்) தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம் தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம் உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரினுக் குயிராகிய தெய்வம் செய்வ மென்ருெரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் கைவருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்(வெள்ளைத்) ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற் ருெளிபெறு நாடு; சேனகன்றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பாரசிகப் பழந்தேசம்