பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தோணலத்த துருக்கம் மிசிரம் சூழ்கடற் புறத்தினில் இன்னும் காணும் பற்பல நாட்டிடை யெல்லாம் கல்வித் தேவியின் ஒளி மிகுந்தோங்க (வெள்ளைத்) 11. காட்சி முதற்கிளை-இன்பம் T இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு-இவை யனைத்தும் ஒன்றே. ஞாயிறு, வீட்டுச் சுவர், ஈ, மலை யருவி, குழல், கோமேதகம்-இவ் வனத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணன், குருவி, மின்னல், பருத்தி, இ.தெல்லாம் ஒன்று. முடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி இவை ஒரு பொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ள தெல்லாம் ஒரே பொருள், ஒன்று. இந்த ஒன்றின் பெயர் தான். "தானே தெய்வம். "தான் அமுதம், இறவாதது.