பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{V நம் புலவர்கள் எல்லாரும் கடவுள் அனுபவம் உடைய வர்கள். கடவுள் அனுபவம் பெற்ற அவர்கள் எதையும் உலகக் கண்ணுேட்டத்துடன்தான் பார்க்கிருர்கள். 'உலகு எலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்' என்கிருர் சேக்கிழார். 'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்' என்று பாடுகிருர் கம்பர். 'அங்கு இங்கு எதைபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த என்று வேண்டுகிருர் தாயுமானவர். (மூர்த்தியாகி 'உலகம் எலாம் போற்ற ஒளி வடிவகிை' என்கிருர் இராமலிங்க அடிகள். இவ்வாறு எல்லாவற்றையுமே உலகமாகப் பார்த்தவர்கள் நமது கவிஞர்கள். அந்த ஒப்பற்ற கவிஞர் பரம்பரையில் வந்தவர் கவிஞர் பாரதியார். பாரதியார் ஒரு தேசிய மகாகவி. பாரத நாட்டின் அடிமை ஆட்சியை நீக்க வெற்றி முரசு கொட்டிய வீரக்கவி. ஆனால் அவர் அதற்குள் மட்டும் நின்றுவிடவில்லை. உலக மெங்கும் உலாவுகிரு.ர். இதன் காரணமாக பாரதி தன் நாடு வாழ விரும்புவது போலவே, உலகமும் வாழவேண்டுமென்று ஆசைப்படுகிரு.ர். "கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்டு எனுமோர் தெய்வம்" என்று பாடுகிரு.ர். பாரதிக்கு உலக மக்கள் எல்லாருமே ஒரே சாதி; ஒரே குலம்; ஒரே குடும்பம். அவர் இந்தியர் என்ருே, சீனர் என்ருே, ருஷ்யர் என்ருே, அமெரிக்கர் என்ருே பார்க்கவில்லை. உலகத்து மக்கள் அத்தனை பேரையும் ஒரே வயிற்றில் பிறந்த சகோதரராகவே பாவிக்கிரு.ர். "நான் சாதி பேதத்துக்கு நண்பன் அல்ல; இந்தியர்கள் எல்லாரும் அல்லது இந்துக்கள் எல்லாரும் ஒரே சாதி என்ற