பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மருளுறு பகைவர் வேந்தன் வலிமையாற் புகுந்த வேளை 'உருளுக தலைகள், மானம் ஒங்குகென் றெதிர்த்து நின்ருய். யாருக்கே பகை யென் ருலும் யார்மிசை இவன்சென் ருலும் ஊருக்குள் எல்லை தாண்டி உத்தர வெண்ணி டாமல், போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை வேருக்கும் இடமில் லாமல் வெட்டுவேன் என்று நின்ருய் வேள்வியில் வீழ்வ தெல்லாம் வீரழும் புகழும் மிக்கு மீள்வதுண் டுலகிற் கென்றே வேதங்கள் விதிக்கும் என்பர்; ஆள்வினை செய்யும் போதில், அறத்திலே இளைத்து வீழ்ந்தார் கேள்வியுண் டுடனே மீளக் கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். விளக்கொளி மழுங்கிப் போக வெயிலொளி தோன்றும் மட்டும், களக்கமா ரிருளின் மூழ்குங் கனக மாளிகையு முண்டாம்; அளக்கருந் தீதுற் ருலும் அச்சமே யுளத்துக் கொள்ளார், துளக்கற ஓங்கி நிற்பர்; துயருண்டோ துணிவுள் ளோர்க்கே!