பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 15. புதிய ருஷியா (ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி) மாகாளி பராசக்தி உருசியநாட் டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகாவென் றெழுந்தது.பார் யுகப்புரட்சி; கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்; வாகான தோள்புடைத்தார் வானமரர்; பேய்களெலாம் வருந்திக் கண்ணிர் போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்; வையகத்தீர், புதுமை காணிர்! இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெனும்பே ரிசைந்த பாவி சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்ருேரும்; தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்முடன்; பொய்சூது தீமை யெல்லாம் அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந் தோங்கினவே அந்த நாட்டில். உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை; பிணிகள்பல வுண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க ளுண்டு; உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; தூக்குண்டே பிறப்ப துண்டு; முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே ஆவிகெட முடிவதுண்டு.