பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இம்மென்ருல் சிறைவாசம்; ஏனென்ருல் வனவாசம்; இவ்வா றங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்த்த போதில், அம்மைமணங் கனிந்திட்டாள்; அடிபரவி உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுநல் விழியாலே நோக்கினுள்; முடிந்தான் காலன். இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன் இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே! குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்தது.பார்; குடியரசென்று உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்ருர், இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான், கிருத யுகம் எழுக மாதோ! 16. ஜய பேரிகை பல்லவி ஜய பேரிகை கொட்டடா-கொட்டடா ஜய பேரிகை கொட்டடா!