பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5彦 மதுபானம் செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்து கிறது. செடியின் சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் கண்ணுடியிலே கீறிக் காட்டு வதைப் பார்க்கும்போது செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக் கும் பேதமில்லை என்பது ருஜுவாகிறது. இவ்விதமான அற்புத பரீrைகளினல் உலகத்தின் உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹாளுகிய மேற்படி ஜகதீச சந்திரவஸ நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பக்தியடைவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின் மேன்மையைப்பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது, அந்த வார்த்தைகளிலே மிகச் சிறந்த தொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்த வார்த்தைகளைப் படிக்கும் போதே படிப்போரின் ஜீவசக்தி மிகுதிப்படுகிறது. அவர் சொல்லுகிருர் :- 'ஸாதாரணக் கருவிகளால் மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின் ஸ்ந்ததியிலே நாம் பிறந்திருக்கிருேம். ......... ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தினுல், அடைத்திருந்த கதவுகள் திறக்கும். அஸாத்யமாகத் தோன்றுவது அவனுக்கு ஸாத்யமாகும்; உண்மை தேடு வதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களை விரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்வி களையும் ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்கு நைவேத்யமாக விடவேண்டும். பராததேசம் இப்போது வென்று காப்பாற்ற வேண்டிய வஸ்து யாது? சிறியதும் வரம்புற்றதுமாகிய ஒரு பொருளினல் பாரத மாதா திருப்தியடைவாளா? இவளுடைய அற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும் செயல் களையும் யோசிக்கும் போது, தாழ்ந்த தரமுள்ளதும் சில