பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 வதையே சக்தி தர்மம் என்றும் சொல்லுகிருேம். பிறருக்கு நாம் செய்தல் இஃதேயாம். லோகத்துக்கு இனியது செய்வோன் தன் உள்ளத் தில் பயம் வைத்துக் கெண்டிருக்கலாகாது. பயம் தீர் வதற்கு வழியென்ன? பகைதீர்ந்தால் பயந்தீரும். பகை தீர்க்கும் வழியென்ன? நம்முடைய மனத்தில் பிறர் மீது பகை யெண்ணம் தோன்ருமலிருக்க வேண்டும். பாம்பினி டத்திலே நாம் விரோத புத்தி கொள்ளாவிட்டால் அது நம்மைக் கடிக்காது. இந்த வார்த்தையைப் பரிஹாசம் பண்ணுதல் எளிது; யாரும் செய்யலாம். ஆனல் அது உண்மை. பாம்பைப் பழக்கிவைக்கும் திறமை அன்புக் குண்டு; பாம்பினிடத்தில் கருணை செய்யும் ஞானியைப் பாம்பு கடிக்காது. லோகோபகாரத்தைக் கருதி அந்த ஞானி மனதிலே அன்புடன் அந்தப் பாம்பைக் கோபித் தால் அது அவ்விடம் விட்டு ஒடிப் போய் விடும். எல்லா ஜீவாரசிகளிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே புத்தன் சொல்லிய தர்மம். மஹான்க ளெல்லாம் காட்டிய வழி இதுதான். தற்காலத்தில் மனித ஜாதி கூடிய வரை நாகரிகப் பட்டிருப்பதால், மிருகங்கள், பகதிகள், பூச்சி, புழு இவற்ருல் மனிதனுக்குள்ள பயம் அநேகமாகத் தீர்ந்து போய் விட்டது. இப்போது மனிதர் ஒருவருக் கொருவர் பயப்படுவது தான் அதிகம். இதற்கு இதுவரை மனித ஜாதியார் கண்டு பிடித்து அனுசரணையில் வழங்கிவரும் மருந்து உபயோக மில்லை. பயத்தினல் விரோதம், போர் உண்டாகிறது. மனித ஜாதி வீணாக அழிகிறது. எல்லோருக்குமே நஷ்டமுண்டா கிறது. பரஸ்பர பயம் நீங்கவேண்டுமானல் அதற்குப் போர் சரியான மருந்தில்லை. உலகம் தோன்றிய காலமுதல் இன்றுவரை போர்கள் நடந்துதான் வருகின்றன. இது