பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வட்டிலும் மனித ஜாதியிலே ஒருவருக்கொருவர் பயப்படு மது துளி கூடக்குறையவில்லை. அன்பிருந்தால் பயந் தெளிந்து போகும். ஒரே குடும்பத்திலே ஒருவரையொருவர் கண்டு மரணபயங் கொள்வதில்லை. உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா? எளியவன் அன்பு தொடங்கி வலிய வன் சும்மா இருந்தால் ஒன்றும் நடக்காது. எளியவன் வலிமையை விரும்பி நடக்க வேண்டும். வலியவன் எளிய வணிடம் அன்பு செலுத்த வேண்டும். யாரிடத்திலும் அன்புடன், யாரிடத்திலும் பயமின்றி நல்லோன் லோகோபகாரஞ் செய்கிருன். பராசக்தியின் கையிலே தன்னை ஒரு கருவியாக ஒப்புவித்துவிட்டு, அவள் சித்தப்படி தொழில் செய்துவருகிருன். உலகத்தை ஆக்கு தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழிலுக்கும் பராசக்தி வெவ்வேறு விதமான கருவிகளை வழங்குகிருள். காற்றும், ஒளியும், வெம்மையும், மண்ணும், நீரும், சித்த மும் உயிரை ஆக்குவதற்குக் கருவிகளாகின்றன. காற்றும், ஒளியும், வெம்மையும், நீரும், சித்தமும் பிற உயிர்களும் உயிரைக் காப்பதற்குக் கருவிகளா கின்றன. இவையனைத்தும் காலமும் சேர்ந்து நாசத்திற்குக் கருவிகளாகின்றன. மனித உயிராகிய நான் மற்ற மனித வுயிர்களைக் காக்கும் கருவியாகத் தொழில் செய்வது நன்ரு? அழிக்கும் கருவியாகப் போவது நன்ரு? காப்பது நன்று. மேலும் கர்ம விதியை மறக்கலாகாது. காக்க விரும்பு வோன் காக்கப்படுவான்; அழிக்க விரும்புவோன் அழிக்கப்