பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மேலும் வளர்த்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்ட வேண்டும். இஹலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர். குறிப்பு:-இக் கட்டுரை தராசு என்ற பாரதியார் நூலில் உள்ளது. 20. ஹிந்து தர்மம் 29 நவம்பர் 1917 வாரீர் நண்பர்களே, ஐரோப்பாவிலும் அமெரிக்கா விலும் ஹிந்து தர்மத்தைப் பரவும்படி செய்ய வேண்டு மால்ை அதற்கு இதுவே மிகவும் ஏற்ற தருணம். ஆஹா! ஸ்வாமி விவேகாநந்தரைப் போலே பத்துப்பேர் இப்போதி ருந்தால் இன்னும் ஒரு வருஷத்துக்குள் ஹிந்து தர்மத்தின் வெற்றிக் கொடியை உலகமெங்கும் நாட்டலாம். அந்தக் கண்டங்கள் யுத்தமாகிய சுழற்காற்றுக்குள்ளே அகப் பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கையிலே, ஹிந்து தர் மத்தை எவன் கவனிப்பான் என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக் கலாம். அந்த ஆக்ஷேபம் சரியன்று. சண்டைக் காலந்தான் நமக்கு நல்லது. இந்த ஸமயத்திலேதான் மனுஷ்ய அஹங் காரத்தின் சிறுமையும் தெய்வத்தினுடைய மஹிமை யும் மனுஷ்யனுடைய புத்திக்கு நன்முக விளங்கும். இவ் வுலக இன்பங்களைத் தர்மத்தினலே பெற்ருலொழிய அவை இன்பங்கள் போலே தோன்றிலுைம் துக்கமாவே முடியும். அவரவர் கர்மத்தின் பயனை அவரவரே அனுபவிக்க வேன்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான். நாம் இன்று நூறு ஸப் மரீன் வைத்துக் கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகர்த் தால், நாளை மற்ருெரு ஜாதியார் ஆயிரம் ஸப்மரீன் கட்டி