பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஜாதிடII ஜூலை 1917 (குறிப்பு :- இக் கட்டுரையில் ஜனம் என்பதையும், ஜாதிஎன்பதையும் தனித் தனிப் பொருள்களில் வழங்கப் பட்டுள்ளன. ஜனம் என்பதை People என்ற கருத்திலும் ஜாதி என்பதை Nation என்ற கருத்திலும் கொண்டு ரவீந்திரநாதடாகுர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை பாரதியார் மொழி பெயர்த்துள்ளார்.) ஜனவகுப்புக்கள் தனித்தனி சுபாவங்களுடைய வெவ்வேறு ஜீவன்களாம். ஆனல் 'ஜாதி"கள் வெறுமே வலிமைக்காகச் சேர்ந்த கூட்டங்களைத் தவிர வேறில்லை. அதுபற்றியே இவற்றின் உட்குணங்களும் புறச் செய்கை களும் எங்கும் ஒரே சந்தமாக, ஒரே மாதிரியாக இருக் கின்றன. இவற்றுள்ளே வேற்றுமைகளிருந்தாலும் அவை தொழில் வலிமையைப் பற்றின வேற்றுமைகளே யன்றி குனபேதங்களல்ல. நவீன உலகத்தில் ஜனத்தின் ஜீவ சக்திக்கும், ஜாதியின் நிபந்தனைகளுக்கும் போர்நடக்கிறது. ஆசியாக் கண்டத்தின் மத்தியில் முன்பு மனிதர் குடியிருந்த நாட்டுக்கும், அதன் மேல் இடைவிடாமல் ஏறிக்கொண்டு வ ந் த பாலைவனத்து மணலுக்கும் சண்டை நடந்தது. உயிரும் அழகும் கொண் ட நாட்டை மணல் அழித்து விட்டது. அதுபோல் ஜாதி ஜனத்தை அழிக்கிறது. மனுஷ்யப் பொதுஜன உத்தம லக்ஷணங்களைப் பரவச் செய்தல் முக்கியமில்லை. என்ற எண்ணத்திலிருந்து ஜாதியின் திறமை வளர்ப்பதாகிய கல்நெஞ்ச ஸம்ப்ரதாயம் பலமடைகிறது. ஸான்ப்ரான்ஸி ஸ்கோ நகரத்திலிருந்து லண்டன்வரை, லண்டனிலிருந்து டோக்யோ வரை ஜாதியெண்ணம் ஆதிக்கம் பெற்றிருக்கும்