பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ஒரு தொழிலாளி' அதாவது யாதேனுமோர் வியாபாரம், அல்லது விவகாரத்தால் கட்டுப்பட்டவன் ஆகும் போது அவனைச் சுற்றி இறுகலான ஒடு தோன்றுகிறது. இந்தத் தொழிலாளித்தனம் என்ற களத்திலே மனிதர் தத்தம் அறிவுக்குத் தனிவழிகள் காட்டித் தமது பலத்தை ஒரு முகமாக்கித் தாம் தாம் முற்படவேண்டுமென்று பரஸ்பரம் முழங்கைகளால் எற்றித் தள்ளுகிருர்கள். தொழிலாளித் தனம் அவசியந்தான். ஆனல் அதை ஆரோக்கிய வரம்பு கடந்து செல்லவிடக் கூடாது. அது மனிதனை அடிமைப் படுத்தவும், குறுக்கவும், கடினமாக்கவும், ஆதர்சங்களில் நம்பிக்கையிழந்து .ெ ல ள கி க லாப ந் தேடுவோகைச் செய்யவும் இடங்கொடுக்கக் கூடாது. புராதன ஹிந்து தேசத்தில் ஸ்மிருதியால் தொழில் களில் வரம்புகடவாமல் நிறுத்தப்பட்டன. அவை முதலாவது ஜனங்களின் பொதுத் தேவைகளாகவும், பிறகு அவரவருக்கு ஜீவனோபாயங்களாகவும் கருதப் பட்டன. எனவே எல்லையில்லாத போட்டியின் தூண்டு தலுக்குட்படாமல், தனித்தனி தனது பரிபூரணத் தன்மை யைப் பரீrை செய்ய நேரமிருந்தது. ஜனங்களுடைய பொதுவான தொழிலாளித் தனத் துக்கு ஜாதியென்று பெயர். அது ஜனங்களுக்குப் பெரிய விபத்தாய்க் கொண்டு வருகிறது. ஏனெனில் அதில் மிகுந்த லாபமுண்டாகிறது; எனவே உயர்ந்த ஆதர்ஸங் களின் நியதிகளிலே மனிதருக்குப் பொறுமையில்லாது போகிறது. லாபம் எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவு ஸ்வார்த்தம், பொருமை, விரோதம், இவற்றின் அல்லல் பலமடைகிறது. இவை மனிதர்களின் மனத்தில் லாபத் தால் விளைகின்றன. உயிருள்ள ஜனங்கள் ஜாதிகளாக இறுகுதல் மேன் மேலும் அவசியமாகிறது. ஜாதியக் கொள்கையின்