பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 சங்கட காலங்களில் ஒரு ஜனத்தின் தற்காப்புச் சிந்தையை ஆதிக்கமுடையதாகச் செய்தல் அவசியமே. அப்போது அதன் ஒற்றுமையுணர்ச்சி கடுமையான விழிப் பெய்துகிறது. இந்த மிகையுணர்ச்சி ஜாதியில் எப்போதும் சாகாதபடி செயற்கையுபாயங்களால் காக்கப்படுகிறது. ஒருவனுடைய வீட்டைத் திருடர் வந்து கொள்ளையிடும் போது அவன் போலீஸ் சேவகனுடைய தொழிலை மேற் கொள்ளவேண்டும். ஆனல் அவனுடைய சாதாரண ஸ்திதியே அப்படியாய்விட்டால் அவனுடைய வீட்டுச் சிந்தை மிகையாகி வீட்டருகே போவோர் வருவோர் மேலெல்லாம் பாய்ந்து விழும்படி செய்கிறது. இந்த மிகையுணர்ச்சி ஒருவன் கர்வப்படத் தக்க உடைமையன்று. இது மெய்யாகவே ஆரோக்கியத்துக்கு லக்ஷணமன்று. அதுபோலவே ஒரு ஜாதியின் தீராத தற்போதமும் ஜனங்களுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும். அதல்ை தற்காலத்துக்குப் பயன் உண்டாவது போலே தோன்றிலுைம் மனிதனுடைய நித்ய ஜீவனுக்கு நஷ்ட முண்டாகும். ஒரு கூட்டம் சேர்ந்து யாதேனுமொரு குறுகிய நோக் கத்துக்குத் தம்மைப் பயிற்சி செய்து கொள்ளுமாயின் பிறகு அதையே தளராமல் காத்து அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று போதனை செய்தல் அந்தக் கூட்டத்திற்கு லாபகரமாகிறது. ஒரு ஜன முழுதையும் குறுகின ஆதர்ஸப்படி பயிற்சி செய்வதே ஜாதியக் கொள்கை. அது ஜனங்களுடைய உள்ளத்தைக் கவரும்போது தர்மக் குறையையும் குருட் டறிவையும் விளைவிப்பது நிச்சயம். இந்த ஜாதியக் கொள்கையின் காலம் பிரம்மாண்டமான ஸ்வார்த்தமும் செருக்கும் தலைப்பட்ட காலம். இது நாகரிகத்தில்