பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 'ஜன்னி நிலையில் இருக்கும் அக்கம்பக்கத்துத் தேசத் தாருக்குள்ள பலம் நமக்கில்லையே, அவர்கள் பிறருக்குச் செய்யும் தீமை நம்மால் செய்ய முடியவில்லையே நாமன்ருே தீமையனுபவிக்கிருேம்' என்று பொருமையுண் டாக்குகிறது. எனது ஐரோப்பிய நண்பர் அடிக்கடி என்னிடம், “இத்தனை கொடிய தீமையை அழிக்க உபாய மென்ன?” என்று கேட்கிருர்கள். வெறுமே எச்சரிக்கை செய்து விட்டு மாற்று வழி சொல்லா திருக்கிறேனென்றே என் மேல் பலர் குற்றஞ் சொல்லுகிருர்கள்; ஒருவித அனுஷ் டானத்தால் நன்மையுண்டாகு மென்று நினைக்கிருேம். அனுஷ்டானத்துக்குப் பின்னே மறைந்து நிற்கும் உள்ள நிலை தவருக இருந்தால் அனுஷ்டானம் இன்றில்லா விட்டாலும் நாளைக்குத் தீமையுண்டாக்கவே செய்யும் என்பதை நாம் மறந்து விடுகிருேம். இன்று ஒரு ஜாதி கொண்டிருக்கும் அனுஷ்டானம் நாளே எல்லா ஜாதிக்கும் பரவும். மனிதர் தமது மிருகக்குணங்களையும் கூட்டக் கோப தாபங்களையும் விடும்வரை புதிய அனுஷ் டானம் புதிய தொரு துன்பக் கருவி ஆகுமேயன்றி வேறில்லை. அல்லது வியர்த்தமாகும். நாம் தார்மிகமாக ஸத்குணத்தையும் கார்யஸித்திக் குரிய அனுஷ்டானத்தை யும் ஒன்ருகக் கருதிக் குழம்பியே பழகியிருக்கிருேமாதலால் ஒவ்வொரு புதிய அனுஷ்டானமும் தோற்றுப் போகும் போது தர்ம விதியினிடத்திலேயே அவநம்பிக்கை கொள்ள நேரிடுகிறது. ஆதலால் நான் எந்தப் புதிய அனுஷ்டானத்திலும் நம்பிக்கை வைப்பதில்லை. தெளிவான யோசனையும், பெருந்தகைமையுடைய உள்ளமும், நேர் தடையுமுடைய வர்களாய் உலக முழுதிலும் ஆங்காங்கே இருக்கும் தனித் தனி மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.