பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அவர்களே தர்மத்தின் உண்மைக்கு வாய்க்கால்களாவார் கள். நமது தார்மிக லக்ஷயங்கள் உளியும் சம்மட்டியும் வைத்துக் கொண்டு வேலை செய்யவில்லை. சிற்பிகளிடம் அனுமதி கேட்காமல் மரம் வளர்வது போல் மண்ணுக்குள் வேர்களையும் இயற்கையிலேயே விடுகின்றன. இந்தக் காரணத்தாலேதான் ஜப்பானில் ப்ரஞ்ச் தேசத்து யெளவனப் பிராயமுடைய தர்மிஷ்டைெருவனைக் கண்ட போது இனி நாகரிகத்தில் உயர்ந்த காலம் வருவதைப் பற்றி என் மனதில் நிச்சய மேற்பட்டது. ஐரோப்பாவில் அழிவின் பெரிய சக்திகள் களிக் கூத்தாடிக் கொண்டிருக் கையிலே நான் இந்தத் தனியான வெளிக் கீர்த்தி பெருத ப்ரஞ்சு இளைஞனைக் கண்டேன். அவனுடைய முகத்தில் புதிய ஸஅர்யோதயத்தின் ஒளி வீசிற்று. அவனுடைய வாக்கில் புதிய உயிரின் அதிர்ச்சி தோன்றிற்று. எனவே ராஜ்யதந்த்ரிகளின் பஞ்சாங்கத்தில் பதிவாகா விடினும் மஹத்தான புதிய யுகம் ஏற்கெனவே பிறந்து விட்ட தென்பதை நான் உணர்ந்து கொண்டேன். -ரவீந்திரநாத டாகுரின் ஐம் பெருங் கட்டுரைகள் என்ற நூலிலிருந்து-மொழி பெயர் த் தவர் பாரதியார். 23. ரீ ரவீந்திரர் திக்விஜயம் 25 ஆகஸ்டு 1921. மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை; கற்ருேர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு. கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்திரரைப் பேலே அடையவேண்டும்.