பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 முறத்தில்ை புலியைத்தாக்கும் 發 மொய்வரைக் குறப்பெண்போலத் திறத்தில்ை எளியையாகிச் செய்கையால் உயர்ந்து கின்ருய்' என்று வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்தைப் பாராட்டுகிருர் பாரதி. அவருடைய உலகப் பார்வைக்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்! வறுமையை பாரதி மிக ஆவேசமாகச் சாடுகிருர். தன் நாட்டில் மட்டும் வறுமை ஒழிந்தால் போதாது: உலக மெங்கும் அதை ஒழித்துவிடவ்ேண்டுமென்று முழ்க்கமிடுகிரு.ர். 'வயிற்றுக்குச் சோறிடவேண்டும்-இங்கு வாழும் மாந்தருக்கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்று பறைசாற்றுகிரு.ர். பாரதி உலகை நேசிக்கிழுர். உலகெங்கும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்புகிரு.ர். உலக மக்கள் ஒருவருக் கொருவர் உடன் பிறந்தவர்களைப்போல் பழகி வாழ வேண்டு மென்கிரு.ர். உடன் பிறந்தார்களைப் போல-இவ் உலகில் மனிதர் எல்லாரும் இடம் பெரிதுண்டு வையத்தில்-இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர் என்கிரு.ர். பாரதி தமிழகத்தில் வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கும் உலக மகா கவிகள்ன் பரம்பரையைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பிய வீரர் பாரதி. அவர் குரலைக் கேட்டு எழுந்த எண்ணற்ற வாலிபர்களில் திரு. பெரிய சாமித் துாரனும் ஒருவர். 1928ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தூரன் அவர்களுக்குப் பாரதியர்ரிட்ம் பக்தி ஏற்பட்டுவிட்டது. "பாரதி பைத்தியம்’ என்று சிறப்புப் பெயரும் அப்போதே அவருக்குக் கிடைத்தது.