பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 பத்திராதிபர்களுக்குப் பேரானந்தம் விளையும்படி மிகவும் அழுத்தமான பாஷையில் வற்புறுத்தியிருக்கிரு.ர். ஆனல், இஃதன்று அவருடைய முக்கியோபதேசம். நாம் மேற்றிசை யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களைக் காட் டிலும், அவர்கள் நம்மிடம் கற்றுக் கொள்ளவேண்டிய அம்சங்கள் அதிகமென்பதே அவருடைய மதம். ஆசியா வையும் ஐரோப்பாவையும் ஒற்றுமைப்படுத்தினலன்றி, உலகத்தில் யுத்தங்கள் நிற்கப் போவதில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் ஸ்மத்துவம், ஸ்ஹோதரத்துவம், அன்பு என்ற தளைகளாலே கட்டப்பட்டாலன்றி உலகத்தில் ஸமாதானத்துக்கிடமில்லை. ஸமாதானமே யில்லாமல், மனிதர் பரஸ்பரம் மிருகங்களைப் போலே கொலை செய்து கொண்டு வருமளவும், மனிதருக்குள்ளே நாகரிக வளர்ச் சியைப் பற்றிப் பேசுதல் வெற்றுரையே யாகுமென்று கூறி விடுக்க. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இங்ங்னம் ஒற்று மைப் படுத்துதற்குரிய பல புதிய உண்மைகளையும் அறங் களையும், தம்முடைய அற்புதமான நூல்களாலும் உபந்நி யாஸங்களாலும் தெளிவுபடுத்தி மஹான் டாகுர் இந்த பூமண்டலத்தையே தமக்குக் கடன்படுமாறு செய்து விட்டார். இதனை ஜெர்மனி முற்றிலும் நன்முக உணர்ந்து கொண்டு, அதன் பொருட்டாக நம் ரவீந்த்ரரிடம் அளவிறந்த மதிப்புச் செலுத்துவதுமன்றி அபாரமான நன்றியும் செலுத்துகிறது. தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தியொரு கீர்த்தியாகுமா? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்த்ரநாதர் இந்தி யாவை பூலோக குருவென்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி மலர்கள் வாழ்க.