பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 என்று பெயர் சொல்லுவது பொருந்தும் என்று தோன்று கிறது. இதை அபேதக் கட்சி' என்று சொல்வாருமுளர். இந்தக் கட்சி இந்தியாவில் ஏன் இதுவரை ஏற்பட்டு விருத்தியடையவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முதலாவது காரணம் ஹிந்து ஜன ஸமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பதுபோலவே அத்தனை அதிகமான தார தம்மியம் இல்லை. முதலாளி, தொழிலாளி, செல்வன், ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பதுபோலே நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தா ன ம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது. லண்டன் நகரத்தில் பிச்சைக்காரனைப் போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு போவான். பிச்சைக் குற்றத்திற்காக மாஜிஸ்டிரேட் தண்டனை விதிப்பார். நமது தேசத்தில் தேஹி' என்று கேட்டவனுக்கு நாஸ்தி என்று சொல்கிறவனை எல்லோ ரும் சண்டாளன் என்று தூவிம்பார்கள். இங்கிலீஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக் கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிருர்கள். பிச்சைக்காரன் வந்தால் ஏண்டா தடி போலிருக்கிருயே: பிச்சை கேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு' என்று வைது துரத்துவார்கள். "உழைத்து ஜீவனம் பண்ணு' என்று வாயில்ை சொல்லி விடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலை யகப்படாமல் எத்தனை லக்ஷலகம் பேர் கஷ்டப்படுகிருர்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.