பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ புத்திரர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. மூத்த குமாரன் பெயர் காயீன். இளையவன் பெயர் ஆபேல். காயீன் ஆபேலிடம் விரோதமாய் ஆபேலைக் கொன்று விட்டானம், அப்போது கடவுள் காயினை நோக்கி- உன் சகோதரனுகிய ஆபேல் எங்கே?' என்று கேட்டாராம். அதற்குக் காயீன் "எனக்குத் தெரியாது. சகோதரனுக்கு நான் காவ லாளியோ?” என்ருளும். அதுபோல உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங் களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட் டெடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றிமாளும் படி விடுகிருர்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், "அவர்களுடைய கர்மத்தினல் அவர்கள் ஏழையாயிருக்கிருர்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?' என்று கேட்கிரு.ர்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்யவேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளி கள் ஒரு சபை கூடி அந்தக் கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்க்ளை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறை வேற்ற வேண்டும். அன்பினல் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங்ங்ணம் செய்யாமல் அஜாக் கிரதையாக இருந்தால், ஐரோப்பாவைப்போல் இங்கும், ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முற்றி அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பது போல், இங்கும் ஜனசமூஹம் சிதறி மஹத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும். பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும், அன் பையும், ஸ்மத்துவ நினைப்பையும் கைக்கொண்டால், உலகத்தில் அநியாயமாக உத்பாதங்கள் நேரிட்டு உலகமழி யாமல் காப்பாற்ற முடியும். பாரசக்தி மனுஷ்ய ஜாதியை அன்பிலும் ஸ்மத்துவத்திலும் சேர்த்து நலம் செய்க,