பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முற்காலத்திலே இந்தியா செல்வத்துக்கும். கல்விக் கும், ஞானத்துக்கும், தியானத்துக்கும், பக்திக்கும், வீரத்துக்கும், பராக்கிரமத்துக்கும், சாஸ்திரங்க்ளுக்கும், பலவிதமான கைத்தொழில்களுக்கும் விசேஷ ஸ்தலமாக விளங்கி வந்தது. இக்காலத்திலே, இந்தியா பஞ்சத்துக்கும், பசி மரணத்துக்கும், வறுமைக்கும் சிறுமைக்கும், தொத்து நோய்களுக்கும் சாசுவத ஸ்தலமா யிருக்கிறது. இந்திய தேசத்தார் அழிவுறுவதுபோல் மற்றபடி பூமண்டல முழு திலும் எந்நாட்டிலும் மனிதர் இவ்வாறு வருஷந் தவருமல் வேறு காரணம் யாதொன்றுமில்லாமல் சுத்தமான பஞ்சம் காரணமாக பதியிைரம் லக்ஷக் கணக்கில் மடிந்து போகும் ஆச்சர்யத்தைக் காணமுடியாது. மனித ஜாதியார்களுக் குள்ளேயே இப்படி யென்ருல், மற்ற மிருகங்கள், பட்சி கள், பூச்சிகள் வருஷந் தவருமல் கூட்டங் கூட்டமாக வெறுமே சுத்தமான பட்டினியால் மடியும் அநியாயம் கிடையாதென்பது சொல்லாமலே விளங்கும். இங்ங்னம், மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும், பொதுக் கஷ்டமாகவும் ஹிந்துக்களுக்கு விசேஷ அவமான மாகவும் விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அந்த நோயை நீக்கி இந்தியாவிலும் பூமண்டலத்திலும் ஸ்கல ஜனங்களுக்கும் ஆஹார சம்பந்தமாக பயமில்லாதபடி அரைவயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவசரங் களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான் கருதுகின் றேன். இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய ஸாத னங்களாக எனக்குத் தோன்றும் உபாயங்களை எழுதுகி றேன். இவ்விஷயத்தைக் குறித்துத் தமிழ் நாட்டு மக்களில்