பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வேறு பலரும் தத் தமக்குப் புலப்படும் உபாயங்களை நமது 'மித்திரனுக்கெழுதி யனுப்பும்படி வேண்டுகிறேன். பூ மண்டலத்தில் அபார நலத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ந்த முக்கியமான கருவிகளில் ஒன்ருக நிற்கும் பெருமையும் புகழும் 'சுதேசமித்ரனுக் கெய்துக. மனித ஜாதி முழுமைக்கும் பேரவசியமான இந்த மஹா மஹோபகாரத்தை நடத்துவதற்கு உறுதியான தந்திரங் களைக் காட்டிக் கொடுப்பதாகிய நிகரற்ற மஹிமை தமிழ் நாட்டு மேதாவிகளுக்கெய்துக. உலகத்தில் செல்வத்தின் சம்பந்தமான ஏற்றத் தாழ்ச்சிகள் மற்ற எல்லாக் காரணங்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டிலும் மிகக் கொடியனவாக மூண்டிருக் கின்றன. மனுஷ்ய நாகரிகம் தோன்றியகால முதலாக எல்லா ஜனங்களும் ஸ்மானமாக வாழவேண்டும் என்ற கருத்து ஞானிகளாலும் பண்டிதர்களாலும் வற்புறுத்தப்பட்டு வந் திருக்கின்றது. 'ஆனால், ஒருவன் மிகவும் பலசாலியாக இருக்கிருன். அவனைப் பலமில்லாதவர்கள் மேன்மையுடை யோனகக் கருதுகிருர்கள். அவனும் அதில் மகிழ்ச்சி கொண்டவனக பலமில்லாதவர்களை வேறு சிருஷ்டியாக நினைத்து மிக இழிவாக நடத்தத் தொடங்குகிருன். இங்ங்ணமே அழகுடையவன் அழகில்லாதவர்களைத் தாழ்வாக நினைக்கிருன். கல்வியுடையோர் கல்லாத மக்களிடம் வைத்திருக்கும் இகழ்ச்சியோ சொல்லுந் தரமன்று. 'விலங்கொடு மக்களனையர் இலங்கு நூல் கற்ருரோடேனையவர். அ. தா. வ து, மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் எத்தகைய பேதமிருக்கிறது, அத்தனை பேதம் கற்முேருக்கும் கல்லாதாருக்கு மி ைட யே உளது. இந்தக் குறள் கல்விப் பெருமையுடையோர்