பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அஃ தி ல் லா தா ரி ன் விஷயத்தில் கொண்டிருக்கும் எண்ணத்தை நன்கு விளக்குகிறது. இங்ங்னமே, பாடத் தெரிந்தவன் அது தெரியாதவரைக் குறைவாக எண்ணி நடத்துகிருன். நெட்டையாக இருப்பவன் குள்ளனக் குறைந்த ஜாதியாக எண்ணுகிருன். மேற் குலத்திற் பிறந்த வன் தாழ்ந்த குலத்தானை இகழ்ச்சி செய்கிருன். சுருங்கச் சொல்லும் மிடத்தே, யாதேனுமொருவித விசேஷ அது கூலம் படைத்தோர் அஃது படையாதவரை இழிவாக எண்ணிநடத்துகிருர்கள். இங்ங்ணம் கோடிவிதமான காரணங்களை உத்தேசித்து மனிதருக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த பேதங்களால் ஏற் படும் கஷ்டங்களும் மனஸ்தாபங்களும் பொருமைகளும் கர்வங்களும் போராட்டங்களும் எண்ணற்றனவாகின்றன. இதனால் இவ்வுலகத்தில் மனித வாழ்க்கை நரக வாழ்க்கை போலத் தீராத் துன்பமாக முடிந்திருக்கிறது. ஏனென்ருல, ஒருவன் எத்தனை விசேஷ அநுகூலங்கள் படைத்திருந்தபோதிலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்குக் குறைந்தவனகவே இருக்கும்படி இயற்கையமைப்பு இருக்கிறது. அளவிறந்த கல்வியுடையவன் கொஞ்சம் குள்ளகை இருந்தால் போதும். பிடித்தது சனி! நெட்டை மனிதரைக் கண்டு அவன் பொருமை கொள்வதினின்றும் நெட்டை யாட்கள் அவனை இகழ்ச்சி செய்வதினின்றும் அவனுக்குப் பதவித அனர்த்தங்களும் கவலைகளும் ஏற்படுகின்றன. அவன் தான் குள்ளனகப் பிறந்ததைப் பற்றி ஓயாமல் மனம் நொந்து சாகிருன். மிகுந்த செல்வமுடையவன் கொஞ்சம் கருநிற முடையவனாக இருந்தால் போதும். வந்தது வினை! செந்