பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 நிறமுடையவர்களாலே அவனுடைய வாழ்க்கை நரகத் தைப்போல் ஆக்கப்படுகிறது. இங்ங்னம் எத்தனையோ பேதங்களால் மனிதனுக்குப் பல தொல்லைகள் விளைகின்றன. எனினும், நான் தொடக் கத்திலே கூறியபடி செ ல் வ த் தால் ஏ ற் படு ம் வேற்றுமைகளே சால மிகக் கொடியன. செல்வமுடைய வன் செல்வமில்லாதவரிடத்துக் கொண்டிருக்கும் இகழ்ச்சி யும், செல்வமில்லாதவன் செல்வமுடையோரிடத்தே கொண்டிருக்கும் பொருமையும் வேறெந்த முகாந்திரத் தைக் கருதியும் மனிதருக்குள்ளே ஏற்படுவதில்லை. 'கண்ணுடையோ ரென்பவர் கற்ருேர் முகத்திரண்டு புண்ணுடை யார் கல்லாதவர்' என்று வள்ளுவர் சொல்லியபடி, படித்தவன் டிடியாதவனை வெறுமே குருடகைக் கருதி நடத்துகிருன். பணமுடைய வனே பணமில்லாதனைப் பிணமாக நினைக்கிருன். இதனிடையே மனித ஜாதி நாகரீகத்தில் முற்ற முற்ற ஸ்மத்வம் அவசியமென்ற கொள்கை ஒரு புறத்தே பரவிக் கொண்டேவருகிறது. எத்தனை வேற்றுமைகள் குணத் தாலும் செய்கையாலும் பிறப்பாலும் மற்ற வீண் நியமங் களாலும் மானிடருக்குள் ஏற்பட்டிருந்தபோதிலும், அந்த வேற்றுமைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு எல்லாரும் ஈசனுடைய மக்கள் அல்லது அம்சங்கள் என்ற பரம ஸத்யத்தை மனதில் தரித்து எல்லாரையும் நிகராக பாவிக்க வேண்டும் என்ற கருத்து வேத ரிஷிகளாலும், கிறிஸ்து, புத்தர் முதலிய அவதார புருஷர்களாலும் மனிதருக்கு வற்புறுத்திக் கூறப்பட்டன. அவர்களே ஒட்டி எண்ணிறந்த ஞானிகளும் பண்டிதர்களும் அக்கொள்கையைப் பலவகை யாலே பரவச்செய்து கொண்டு வந்திருக்கிருர்கள். ப. உ.-6