பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடமையாகிவிட்டது. இக் கொள்கை ஜெர்மனியிலும், ஆஸ்திரேலியாவிலும், துருக்கி யிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகிறது. ருஷ்யாவி லிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியா வில் பிரம்மாண்டமான பகுதியாக நிற்கும் லைபீரியா தேசம் ருஷியாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததாதலால், அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இக்கொள்கை மத்திய ஆசியா விலும் பரவி வருகிறது. ஐரோப்பாவிலுள்ள பிரான்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைக் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத் தனங்கள் புரிந்து வருகிரு.ர்கள். ஆனால், இந்த முறைமை போர், கொலை, பலாத்தாரங் களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச் சம்ம தம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக் குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென் பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸ்மத்வம், ஸ்ஹோதரத்வம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண் டோர், அவற்றைக் குத்து, வெட்டு, பீரங்கி, துப்பாக்கிகளி ல்ை பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந் தாத செய்கையென்று நான் நினைக்கிறேன். பலாத்கார மாக முதலாளிகளின் உடமைகளையும், நிலஸ்வான்களின் பூமியையும் பிடுங்கி தேசத்திற்குப் பொதுவாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கை ருஷ்யாவில் வெற்றி பெற்ற தற்குப் பல பூர்வ காரணங்களிருக்கின்றன. நெடுங்கால மாகவே, ருஷியா தேசத்தில் ஆட்சி புரிவோரின் நிகரற்ற கொடுங்கோன்மையாலும், அநீதங்களாலும், செல்வர் களின் குரூரத்தன்மையாலும் பல ராஜாங்க புரட்சிகள்