பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பாரதியார் ஒர் ஆத்ம ஞானி என்று மிகுந்த ஆராய்ச்சி செய்து ஓர் அன்பர் எழுதியிருக்கிருர். அவருடைய முயற்சியைப் பெரிதும் பாராட்ட வேண்டும். பாரதியாரிடத்து மிகுந்த பற்று நீண்டகாலமாகக் கொண்டிருக்கிறவன் நான். இப்படிப் பல கோணங்களிலிருந்து ஆழ்ந்த ஆராய்ச்சிகள் வெளி வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. நான் பெரும் பாலும் பாரதியார் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதி யுள்ள நூல்களை எல்லாம் கவனத்தோடு படித்திருக்கிறேன். பாரதியார் ஒர் ஆத்ம ஞானி என்று தமது ஆராய்ச்சித் திறமையால் நிலைநாட்ட முயன்றிருக்கிருர் அந்த அன்பர். இது ஒரு புதிய கருத்தாகும். யாருமே அவ்வாறு பாரதியார் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதியவர்கள் இக்கருத்தைக் குறிப்பிடவே இல்லை. ஆனால், கண்ணன் பாட்டின் முதல் பதிப்பிற்கு முகவுரை எழுதிய அன்பர் திரு. பரலி சு. நெல்லையப்பப் பிள்ளை என்பவர்மட்டும் பாரதியார் தமிழ் நாட்டின் தவப்பயன் என்றும், ஜீவன் முக்தர் என்றும் குறிப் பிடுகின்ருர். அது அவருக்கு பாரதியார் மேலுள்ள பேரன்பை மட்டும் காண்பிக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும். அதே கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்பிற்கு, மிகச் சிறந்த திறனாய்வாளரான திரு. வ. வே. சு. ஐயர் அவர்களும் பாரதியாரிடத்து மிகுந்த மதிப்பு வைத்திருக்கிருர் என்று அவருடைய முன்னுரையைப் படிக்கும்போது தெளிவாக விளங்கும்.