பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கூறிக் கொண்டு விளக்கேற்றிக் கொள்ளுவதற்காக வருகின்ற அந்த கோபியர் பெண்மணி உண்மையில் விளக்கேற்றிக் கொள்ளவில்லை. கண்ணனது அழகைக் கண்டு அப்படியே சொக்கி நிற்கின்ருள். முக அழகைப் பார்த்துக்கொண்டேயிருந்தவள், வேறு ஒரு நினைப்புமின்றி ஒருவிரலையே அந்தத் தீபத்தில் வைத்துவிடுகின்ருள். அவளுக்கு விரல் பற்றி எரிகின்றதே என்ற நினைவேயில்லை. அப்படியே கடவுளிடம் தன்னை மறந்து ஐக்கியமாகி விடுகின்ருள். தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா என்ற அற்புத மான வரிகளை நினைக்கும்போது, இந்த அழகிய ஓவியம் நினைவிற்கு வருகின்றது. மேலும் பாரதியார், தம் அன்புக் குரிய திருமதி யதுகிரி அம்மாவிடம் சொன்னுராம்: "இந்த பாடல்கள் சிறியதாக இருக்கிறதென்ருலும் பிற்காலத்தில் மிக அழகான இசையமைத்து நிச்சயமாகப் பாடப்படும். அவை போற்றி மதிக்கப்படும். தமிழ்நாடு இன்னும் குழந்தைப்பருவத்தில் இருக்கிறது. இப்பொழுதுதான் கண் திறந்திருக்கிறது" என்று கூறினராம். இவை இப்பொழுது உண்மையாகிவருகின்றதை நாம் அறிவோம்.) காக்கைச் சிறகினிலே நந்த லாலா! நின்றன் கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா! I பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! நின்றன் பச்சைநிறந் தோன்று தையே, நந்த லாலா; 2 கேட்கு மொலியிலெல்லாம் நந்த லாலா! . நின்றன் கீத மிசைக்குதடா, நந்த லாலா! 3 தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத் தீண்டுமின்பற் தோன்றுதடா நந்த லாலா! 4