பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 மன்னர் குலத்தில் பிறந்தவன் - வட மாமது ரைப்பதி யாள்கின்ருன்: - கண்ணன் தன்னைச் சரணென்று போவையேல் - அவன் சத்தியங் கூறுவன்' என்றனர். மாமது ரைப்பதி சென்று.நான் - அங்கு வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே - என்றன் நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி நன்மை தருகென வேண்டினேன்; - அவன் காமனைப் போன்ற வடிவமும் - இளங் காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப் போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், ஆடலும் பாடலும் கண்டுநான், முன்னர் ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல வேண்டு'மென் றுள்ளத்தில் எண்ணினேன் - சிறு நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன் நாளுங் கவலையில் மூழ்கினேன்; - தவப் பாடுபட் டோர்க்கும் விளங்கிடா - உண்மை பார்த்திவன் எங்ங்னம் கூறுவான்? என்று கருதி யிருந்திட்டேன்; . பின்னர் என்னைத் தனியிடங் கொண்டுபோய், - "நினை நன்று மருவுக! மைந்தனே! - பர ஞான முரைத்திடக் கேட்பைநீ; - நெஞ்சில் ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு விண்ணே யளக்கும் அறிவுதான்!