பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9I 4. சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்: தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம் பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம். (எங்கள்) 43. கண்ணம்மாவின் காதல் (குறிப்பு : கண்ணன், கண்ணம்மா என்ற இந்த இரு தெய்வங்களையும் நினைத்தாலே பாரதியாருக்கு உற்சாகம் பொங்கி வழிகின்றது. என்னவெல்லாம் கற்பனைகள் தோன்றுகின்றனவோ? அறியேன். ஆனல் கண்ணன் என் காதலன் என்று ஆறு அழகான கவிதைகள் பாடி இருக் கின்ருர். தங்கப் பாட்டும் பொங்கி யெழுகின்றது. கண்ணம்மா என் காதலி என்ற முறையிலே ஆறு அற்புத மான கவிதைகள் உருவாக்கியிருக்கின்ருர். கண்ணம்மாவின் காதல் என்றும் கவிதை பாடியிருக்கின்ருர், அழகெல்லாம் திரண்டு ஒரு வடிவமானதாய்ப் பாரதியார் கற்பனை செய் திருக்க வேண்டும். காதல், வரம்பை மீறிப் பொங்கி வழிந் திருக்கிறது. அதல்ைதான் பாரதியார் நண்பரான திரு. வ. வே. சு. ஐயர் என்பவர் எழுதுகின்ருர்: "நாயகா நாயகி பாவத்தை கையாள்வதென்ருல் கத்தி முனையில் நடப்பதுபோல நடக்கவேண்டும். கொஞ்சம் தவறிலுைம் இந்தப் பாவத்திற்கு இழுக்கு நேர்ந்துவிடும். ஆனல் பாரதியார் கவிஞர் என்ற பாங்கிலேயே இதை அணுகுகின் ருர். சுகபிரம்மத்திற்கும் இந்த இடம் வழுக்கிவிட்டது. ஆதலால் கவிஞரை நோக்கிக் குற்றம்சாட்டுவது சரியில்லை. மாலை வேளைகளில் கவிஞருடைய கற்பன கர்வத்துடன் காம்பீரியமாகப்பாடும்பொழுது கேட்டவர் இக்கவிதைகளை மாணிக்கங்களாகக் கருதுவர்.” மிகச் சிறந்த திறய்ைவாள