பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X சுற்றி கில்லாதே போ-பகையே துள்ளி வருகுது வேல். கைதனில் வில்லும் உண்டு; காண்டிவம் அதன்பேர். என்று பாரதியார் எழுதியுள்ள கவிதை வரிகளுக்கு அட்சர லக்ஷம் பெறும் என்று மிகஉயர்வாக சொல்லியவர் திரு. வ. வே. சு. ஐயர் அவர்கள். பாரதியாரோடு பல ஆண்டுகள் புதுச்சேரியில் வாழ்ந்து வந்திருக்கிரு.ர். ஆகவே, அவருக்கு பாரதியாரைப் பற்றி மிக நன்ருகத் தெரியும் என்பது திண்ணம். பாரதியார் ஒரு ஜீவன் முக்தர் என்ருல், அது மானிடப் பிறவி எடுத்ததின் பயன் என்று பொதுவாக நாம் அனைவரும் கருதுகின்ருேம். பாரதியார் ஒர் ஆத்ம ஞானி என்ருல் அவர் அதைக் குறிப்பிடத் தவறமாட்டார். படிப்பு அறிவு வேறு, உள் உணர்வு வேறு என்பதை நாம் நன்கு தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாம் ஒன்று பிரம்மமயம் என்று சொல்லுவது எளிது. ஆனல் அவ்வாறு உணர்வது மிகுந்த சிரமமான தொன்ருகும். 'பாரதியார் கோபதாபம் மிகுந்தவர். வ. வே. சு. ஐயரைப் போல ஐம்புலன்களை அடக்கி வென்றவர் அல்ல' என்று என்னிடத்திலே பலமுறை அன்பர் பரலி சு நெல்லையப்பரே சொல்லியிருக்கின்ருர். அதற்குத் திருமதி யதுகிரி அம்மாள் அவர்களின் 'பாரதியார் நினைவுகள்’ என்ற சுவையான நூல் சான்றுகள் பல பகர்கின்றது. புதுச்சேரி கடற்கரைக்குச் செல்லும்போதே பிணங்கிக் கொண்டு, ஒருகணம் தனியாக விலகிப்போய் உட்காருவாராம். அடுத்தகணம் சமாதானத் திற்கு வந்து விடுவாராம். இன்னும் இவைபோன்ற பல குறை நிறைகளை அந்த அம்மாள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். வாழ்க்கை வரலாறு என்ருல் அவ்வாறுதான் உண்மையை வெட்ட வெளிச்சமாகச் சொல்லவேண்டும். it is a most human document of Bharathlyar. Lirg'Éurrgogi', Lipp)ujib அவருடைய குறைநிறைகளைப் பற்றியும் சொல்லுகின்ற சுவை யான நூல் அது.