பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கண்ணம்மா - என் காதலி (குறிப்பு : கண்ணன் பாட்டு முழுதுமே அமரத்வம் வாய்ந்த இலக்கியமாகும். அதன் சிறப்பையும் இசையை யும் பெரிதும் மதிக்கின்றவர்களில் நானும் ஒருவகுைம். "கண்ணம்மா என் காதலி' என்ற பாடல் நாயகா நாயகி பாவத்தில் மிகவும் பொருள் செறிந்தவாறு எழுதப் பெற்றுள்ளது. கண்ணம்மா வேடிக்கையாகப் பின்புறத்தில் வந்து கவிஞனின் கண்ணைப் பொத்துகிருள். கண்ணம்மா தான் இந்த வேடிக்கை செய்கிருள் என்று உடனே அறிந்து கொள்கிருர் கவிஞர். ஒட்டும் இரண்டுளத்தின் தட்டி லறிந்தேன் என்பது மிகஉயர்ந்த ரத்தினத் துண்டு போன்ற வரியாகும். சிரித்த ஒலியில் கண்ணம்மா கைவிலக்கி நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல வானில் என்ன கண்டிட்டாய்? திரண்டு உருண்டுவரும் நுரையில் என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழியில் என்ன கண்டிட் டாய்? பிரித்துப் பிரித்து மேகத்தை அளந்து ஆராய்ந்து பார்த்ததில் என்ன கண்டிட்டாய் என்று கேட்கிருள். அப் பொழுது உடனே கவிஞரின் பதில் வருகிறது. "திரைக் கடலில் நின் முகம் கண்டேன். நீலவானில் நின்முகம் கண்டேன். திரண்டு உருண்டு வரும் நு ைர க ளி ல் நின்முகம் கண்டேன். சின்னக் குமிழிகளிலும் நின்முகம் கண்டேன். பிரித்துப் பிரித்து ஆராய்ந்து பார்த்து மேகத் தினிடையே நின்முகங்கண்டேன் என்று பதில் வருகின்றது. தின்னும் வெற்றிலையிலும் பருகும் நீரிலும் கண்ணன் எம் பெருமானது முகத்தையே காண்கின்றேன் என்ற ஆழ் வாரது பொருள் செறிந்த பாடல் இங்கு நினைவிற்கு வரும். எங்கும் கண்ணனையே காண்பதாகப் பாரதியார் கூறியிருப் பது, எல்லாவிடத்திலும் எப்பொருளிலும் கண்ணபிரானே