பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. காட்சியளிக்கின்ருன் என்ற உயர்ந்த தத்துவத்தைக் கொண்டுள்ளது. உயர்ந்த தத்துவம் ஆயினும் பாரதியார் தமது தனிப்பட்ட மேதைமையால் மிக எளிதாக விளக்கி விடுகின்ருர். மேலும் கண்ணன் பாட்டு முழுதுமே சிறப்பான இசை யமைப்புக் கொண்டது. இதைப்பற்றித் திறய்ைவதில் மிக உயர்ந்து விளங்கும் வ. வே. சுப்பிரமண்ய ஐயர் கூறுவதை ஆழ்ந்து நோக்கிக் கவனிக்க வேண்டும். அவர் கண்ணன் பாட்டுக்கு இரண்டாம் பதிப்பு வெளிவந்த காலத்தில், தமது முன்னுரையிலே இசையைப்பற்றி கூறுகின்ற பகுதி: யில் பின்வருமாறு கூறுகின்ருர்: இன்னென்று: கவிதையழகை மாத்திரம் அனுபவித்து விட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்துவிடக் கூடாது. இதிலுள்ள பாட்டுக்களில் பெரும்பாலனவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையா யிருக்கின்றன. கடற் கரையில், சாந்திமயமான சாயங்கால வேளையில் உலகனைத் தையும் மோஹ வயப்படுத்தி நீலக்கடலையும் பாற்கடலாக் கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பன கர்வத்தோடும், சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய காம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களே மாணிக்கங்களாக மதிப்பர். பாரதியார் தமது காம்பீர மான குரலில் பாடக்கேட்க நாம் கொடுத்து வைக்கவில்லை, ஆனல், சங்கீத கலாநிதி திருமதி டி. கே. பட்டம்மாள், சங்கீத கலாநிதி திரு. என். பாலசுப்பிரமண்யம், திரு டி. என். கிருஷ்ணன். திரு. லால்குடி ஜெயராமன் போன்ற இசைமேதைகள் தமது கச்சேரிகளிலே வாய்ப் பாட்டாகவும், வயலின் இசையிலும் இசைக்கும்போது கேட்டுப் பரவச மெய்துகின்ருேம்.)