பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 (1) மாலைப் பொழுதி லொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன் நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே சாலப் பலபல நற் பகற்கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். (1) ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே, ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன், பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன் ஓங்கிவரு முவகை யூற்றிலறிந்தேன்: ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்: "வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! மாய மெவரிடத்தில்?’ என்று மொழிந்தேன்? (2) சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே திருமித்தழுவி "என்ன செய்திசொல்" என்றேன்: 'நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்து பிரித்துநிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன? பேசுதி' என்ருள்? (3) 'நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்: திரித்த நுரையினிடை நின் முகங்கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்: