பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை: சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்." (4) (2) யோகம் (குறிப்பு : காதலைப் பற்றிய இது ஒர் அற்புதமான கவிதை. இயற்கையை அனுபவிக்க வேண்டும்; காதல் இன்பம் அளவோடு நுகரவேண்டும்; இசையை அனுபவிக்க வேண்டும் என்பது பாரதியார் கருத்து. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்ற பாடலிலும் இதே கருத்துத்தான் நிலவுகிறது. உலகம் என்பது மாயை: வெறுங்கனவு என்பதை பாரதியார் ஒத்துக் கொள்வதே யில்லை. இன்பத்தில் எல்லாம் காதல் இன்பம்தான் பெரிது என்பது பாரதியார் கருத்து. காதல் இல்லா விட்டால் சுடுகாடுதான் மிஞ்சும் என்பது நமது மஹா கவியின் வாக்காகும். காதல் இன்பம் எவ்வாறு உயர்வானது என்பதை சந்திரிகையின் கதையில் தெளிவு படுத்துகிரு.ர். அவர் அந்த நூலில் கூறுகின்ருர், 'காதல் என்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்துக்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாருது. ஸாவித்திரியும் ஸத்யவானும்; லேலாவும் மஜ்னுாவும்; ரோமியோவும் ஜூலியெத்தும் கொண்டிருந் தார்களே, அந்த வஸ்துக்குக் காதலென்று பெயர். அது அழியாத நித்ய வஸ்து. ஹிமயமலை கடலில் மிதந்த போதிலும், காதல் பொய்த்துப் போகாது." காதலின் பெருமையை ஒரு யோகமே என்று பாரதியார் கருதுகின்ருர்.