பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106) மூளு நற் புண்ணியந்தான் - வந்து மொய்த்திடும்; சிவனியல் விளங்கி நிற்கும்; நாளு நற் செல்வங்கள் - பல நணுகிடும்; சரத மெய் வாழ்வுண்டாம். இக் கதை யுரைத்திடுவேன், உளம் இன்புறக் கேட்பீர், முனிவர்களே! நக்க பிரானருளால் . இங்கு நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்; தொக்கன அண்டங்கள் - வளர் தொகை பலகோடி பல் கோடிகளாம்! இக்கணக் கெவ ரறிவார்? புவி எத்தனை யுளதென்பதியா ரறிவா?? நக்க பிரானறிவான்; . மற்று நானறியேன், பிற நர ரறியார்: தொக்க பேரண்டங்கள் - கொண்ட தொகைக்கெல்லை யில்லையென்று.சொல்லுகின்ற தக்க பல சாத்திரங்கள்: - ஒளி தருகின்ற வானமொர் கடல் போலாம்; அக்கட லதனுக்கே - எங்கும் அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். இக்கட லதனகத்தே - அங்கங் கிடை யிடை தோன்றும் புன் குமிழிகள்போல் தொக்கன உலகங்கள்; - திசைத் துவெளி யதனிடை விரைந்தோடும்: மிக்கதொர் வியப்புடைத்தாம் - இந்த வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்; மெய்க்கலை முனிவர்களே! - இதன் மெய்ப்பொருள் பரமசிவன் சக்தி, கண்டீர்