பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x! ஐன்ஸ்டன் கோல்ட்ரிஜ் போன்ற பெரிய மேதை களிடத்தில் சில வேடிக்கையான குறைகள் காணப்படுவதுண்டு. அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்ற போது இவைகள் நன்ருக விளங்கும். மேதைகளின் உயர்ந்த தன்மைக்காக மட்டுமே அவர்களை நாம் போற்றுவதில்லை. இவ்வாறு சில குறைகளுக்காகவும் அவர்களைப் பெரிதும் போற்றுகின்ருேம். "பாரதியார் அபின் சாப்பிடுகின்ற தீய பழக்கம் கொண்டவர்' என்று யாரோ ஒருவர் சொன்னர்! எனக்கு அடங்காத கோபம் வந்துவிட்டது. "நீயும் அபின் சாப்பிடு. பாரதியாரைப் போல ஒர் உணர்ச்சி மிக்க கவிதை எழுத முடிந்தால் உன் காலில் விழுந்து கும்பிடுகிறேன்' என்று நான் கத்தினேன். பாரதியார் இந்த உலக இன்பங்களை நன்கு ரசிக்கத் தெரிந்தவர். "செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் என்பவரைப் பித்தமனிதராம் என்று நையாண்டி செய்பவர். மனைவி தங்கச் சிலைபோல் நிற்கிருள். அவள் பொய்யா? மடங்களில் சொல்லுகின்ற இதே பழக்கத்தை வீட்டிலும் புகுத்திவிட்டார்கள். 'மனைவி பொய் என்று சதா சொல்லிக் கொண்டு இருந்தால் அது அமங்கலமாகுமன்ருே?" என்று ஒர் கட்டுரையிலே சாடுகின்ருர் பாரதியார். பாரதியாருக்கு வேதங்களுடைய கருத்துக்கள், நம்மாழ்வாருடைய அருளிச் செயல்கள் முதலியவற்றை எல்லாம் கிரகித்து மனதில் பதித்து வைத்துக் கொள்ளும் ஓர் நுட்பமான அதி அற்புதமான திறமை உண்டு. அவற்றில் கண்டுள்ள ஆழ்ந்த சிந்தனைகளை எளிதாகத் தமிழில் கவிதையிலும், உரைநடையிலும் அழகாகத் தெளிவு படுத்தும் திறமையும் உண்டு. கண்ணன் பாட்டு இதற்குச் சான்று. மகான் அரவிந்தரின் சேர்க்கையில் வேத ரிஷிகளின் கவிதைகளைப் போலவே உரைநடையில் புதுக்கவிதை இயற்றி யுள்ளார்,