பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 திற்கு ஒர் ஆண்டுவிழாவிற்காகச் சென்றவர், ஒர் அறையில் புகுந்து கொண்டு ஒம்சக்தி ஓம்சக்தி என்று உற்சாகமாக முழங்குகிருராம். பாரதியார் கூறுகிருர் : "கலைமகளே! உனக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன். எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றியிராதென்றன் நாவினிலே வெள்ள மெனப் பொழிவாய்' என்று வேண்டுகின்ருர் பாரதியார், இப் பாடலைப் பிரபலப்படுத்தியவர் தமிழ் நாட்டிலே தெய்விகக் குரல்பெற்ற சங்கீத கலாநிதி திருமதி எம். எஸ். சுப்புலக்ஷமி ஆவார்கள்.) நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணிப் பூண் பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ வஞ்சன யின்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்த ரெல்லாம் தஞ்சமென்றே யுரைப்பீர் அவள்பேர், சக்தி ஓம் சக்தி, ஒம் சக்தி, ஒம். I நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக் கிழைப்பாள்; 'அல்லது நீங்கும்' என்றே யுலகேழும் அறைந்திடுவாய், முரசே! சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு சொல்லு மவர் தமையே அல்லல் கெடுத் தமரர்க் கிணையாக்கிடும் ஓம் சக்தி, ஓம் சக்தி, ஒம். 2 நம்புவதே வழியென்ற மறை தன்னை நாமின்று நம்பி விட்டோம். கும்பிட் டெந்நேரமும் 'சக்தி யென்ருலுனைக் கும்பிடுவேன், மனமே!