பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்; யாதானுந் தொழில் புரிவோம்: யாது மவள் தொழிலாம். துன்பமே யியற்கை யெனும் சொல்லை மறந் திடுவோம்; இன்பமே வேண்டி நிற்போம்; யாவு மவள் தருவாள். நம்பினர் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு: அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம். 50. சக்தி (குறிப்பு : இது பராசக்தியின் லீலையைப் பாடுகின்றது. பாரதியார் தமது இஷ்டதெய்வமான பாரசக்தியின் வல்ல மைகளைப் புதுக்கவிதையிலே கூறுகின்ருர். "மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா' என்று கேட்டவர், மண்ணிலே வேலி போட லாம் வானத்திலேயுேம் வேலிபோடலாம். பராசக்தியின் அருள் இருந்தால் இவை அனைத்தும் முடியும் என்கிருர். மூன்று காதலைப் பற்றி பேசவந்த பாரதியார், 'இவை அத்தனை பொருளின் உள்ளே நின்று வில்லை அசைப்பவளே” என்று பராசக்தியின் லீலையைப் பாடித் துதிக்கின்ருர், 'இப்போது என்னுள்ளே சக்தி கொலு வீற்றிருக்கின்ருள்.